உணவு பதப்படுத்தும் திட்டத்தில் 19,200 நிறுவனங்களுக்கு அனுமதி
உணவு பதப்படுத்தும் திட்டத்தில் 19,200 நிறுவனங்களுக்கு அனுமதி
ADDED : ஜூன் 21, 2026 03:23 AM

சென்னை: பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில்களை முறைப்படுத்தும் திட்டத்தில், 19,200 நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க கடன் வழங்க ஒப்புதல் அளித்து, இந்திய அளவில் தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது.
தமிழகம் உட்பட நாடு முழுதும் ஊறுகாய், மாவு வகைகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிப்பில் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.
அவை, தரமான பொருட்களை உற்பத்தி செய்து, விற்பனையை அதிகரிக்க உதவ, பிரதமர் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தை, 2020 - 21ல் மத்திய அரசு தொடங்கியது.
தமிழகத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் முகமையாக, தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை செயல்படுகிறது.
இயந்திரங்கள் வாங்க திட்ட மதிப்பீட்டில், 35 சதவீதம், அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதேபோல், பல பிரிவுகளில் மானியம் வழங்கப்படுகிறது.
பயனாளிக்கு வழங்கப்படும் மொத்த மானியத்தில் மத்திய அரசின் பங்கு, 60 சதவீதமாகவும், தமிழக அரசின் பங்கு 40 சதவீதமாகவும் உள்ளது. இதுவரை, 19,200 நிறுவனங்களுக்கு, 1,200 கோடி ரூபாய்க்கு மானியத்துடன் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
