இ.எஸ்.ஐ., திட்டத்தில் சேர்ந்த 20.36 லட்சம் புதிய தொழிலாளர்கள்
இ.எஸ்.ஐ., திட்டத்தில் சேர்ந்த 20.36 லட்சம் புதிய தொழிலாளர்கள்
ADDED : செப் 28, 2025 01:17 AM

புதுடில்லி:கடந்த ஜூலையில் இ.எஸ்.ஐ.,சி., எனும் தொழிலாளர் மாநில காப்பீடு கழகத்தில் 20.36 லட்சம் பேர் சேர்க்கப்பட்டு இருப்பதாக மத்திய தொழிலாளர் அமைச்சகத் தின் புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலையில், தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு, மருத்துவக் காப்பீடு திட்டமான இ.எஸ்.ஐ., திட்டத்தின் கீழ் 31,146 புதிய நிறுவனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
முந்தைய ஜூன் மாதத்தில் 19.37 லட்சம் தொழிலாளர்கள் சேர்ந்த நிலையில், ஜூலையில் 20.36 லட்சம் தொழிலாளர்கள் சேர்ந்துள்ளனர். ஜூலையில் இ.எஸ்.ஐ., திட்டத்தில் இணைந்தவர்கள் எண்ணிக்கை 5 சதவீதம் அதிகரித்து உள்ளது.
மொத்தம் இணைந்த 20.36 பேரில், 9.85 லட்சம் தொழிலாளர்கள் 25 வய துக்கு உட்பட்டவர்கள் ஆவர். பாலின அடிப்படை யில், 4.33 லட்சம் பேர் பெண் தொழிலாளர்கள் ஆவர். இது தவிர, மூன் றாம் பாலினத்தவர் 88 பேர் புதிதாக இணைந்துள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.