தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ 'சாம்சங்' நிறுவனத்தில் 47,000 ஊழியர்கள் ஸ்டிரைக்

 'சாம்சங்' நிறுவனத்தில் 47,000 ஊழியர்கள் ஸ்டிரைக்

 'சாம்சங்' நிறுவனத்தில் 47,000 ஊழியர்கள் ஸ்டிரைக்


ADDED : மே 21, 2026 02:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2026 02:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சியோல்: தென்கொரியாவில் உள்ள சாம்சங் நிறுவனத்தின் தலைமையகத்தில் 47,000 ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து செய்தி நிறுவனங்கள் கூறியதாவது:

சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் தொழிலாளர் சங்கத்துக்கும் நிர்வாகத்துக்கும் இடையே நடைபெற்ற பேச்சில் முடிவு எட்டப்படாததை அடுத்து, வியாழன் அன்று வேலை நிறுத்தம் தொடங்கும் என்று ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

தொழிலாளர்கள், பேச்சு நடத்த ஒப்புக்கொண்டாலும் போனஸ் கோரிக்கைக்கு சாம்சங் ஒப்புக்கொள்ளாததால் 18 நாள் வேலை நிறுத்தத்தை தொடங்க வேண்டியதாகி விட்டது என்று தொழிற்சங்க செய்தி தொடர்பாளர் சேயி ஷூங் ஹோ தெரிவித்துள்ளார்.

சாம்சங் நிறுவனத்தின் செயல்பாட்டு லாபத்தில் 15 சதவீதத்துக்கு இணையான தொகையை ஊழியர்களின் செயல்பாடு அடிப்படையிலான போனஸாக தர வேண்டும் என்பது தொழிற்சங்கங்களின் கோரிக்கை ஆகும்.

இவ்வாறு கூறியுள்ளன.

8,000 மெட்டா ஊழியர்கள் பணி நீக்கம்

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, உலகளவில் கிட்டத்தட்ட 8,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அந்நிறுவனத்தின் சிங்கப்பூர் ஊழியர்களுக்கு புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு பணிநீக்க அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஊழியர்களுக்கும் அறிவிப்புகள் அனுப்பப்படும். பொறியியல், தயாரிப்பு மேம்பாடு மற்றும் செயல்பாட்டு துறைகளில் இந்த ஆட்குறைப்பு நடைபெற்றுள்ளது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us