ADDED : ஜன 06, 2026 01:10 AM

சென்னை:வாகன உதிரிபாக நிறுவனமான சம்வர்த்தனா மதர்சன் இன்டர்நேஷனல், தன் துணை நிறுவனத்துக்கு மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டமான பி.எல்.ஐ.,யில் நிதி பெறுவதாக தெரிவித்துள்ளது.
இதனால், காஞ்சிபுரம் தொழிற்சாலையில், 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.
இதன்படி, மதர்சன் எலக்ட்ரானிக் காம்பனன்ட்ஸ் நிறுவனம், மின்னணு உதிரிபாக தயாரிப்பு திட்டமான இ.சி.எம்.எஸ்., பயனாளிகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பி.எல்.ஐ., திட்டத்தில், வரும் 2031வரை, ஆறு ஆண்டுகளுக்கு ஊக்கத் தொகை பெறுவதன் வாயிலாக, 1,900 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாகவும், தமிழகத்தின் காஞ்சிபுரத்தில் உள்ள தனது ஆலையில், மேலும் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

