ADDED : டிச 27, 2025 01:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி : தமிழகத்தில், மாநில அரசின் நிறுவனமான 'ஸ்டார்ட் அப் டி.என்.,' தொழில் முனைவோருக்கான 'கிராமம் தோறும் புத்தொழில்' திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், இரண்டாம் நிலை நகரங்களில் இருந்து, கிராமங்களுக்கு, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களை பரவலாக்கும் வகையில், 100 கிராமங்களை அடையாளம் காண மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
முதல்கட்டமாக, எட்டு கிராமங்களை அடையாளம் கண்டு, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களை துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பெரம்பலுாரில், பின்டெக் நிறுவனத்தின் ஆதரவுடன் எசனை கிராமத்தில் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்று, திருவாரூரில் இரண்டு, மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் தலா ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் துவங்க கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

