UPDATED : அக் 15, 2026 12:00 AM
ADDED : அக் 14, 2026 10:46 PM

தரவு மையங்களுக்கு மின்சார தேவை அதிகரித்து வருவதால், அதன் சுமை பொதுமக்களின் மின் கட்டணத்தில் பிரதிபலிப்பதை தடுக்க அரசு விரும்புகிறது. தரவு மைய துறையில் கிட்டத்தட்ட 20,000 கோடி டாலர், அதாவது 19 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டு வாய்ப்புகள் இருப்பதாக மத்திய அரசு கருதுகிறது.
தற்போது, சுற்றுச்சூழல் மற்றும் கட்டட விதிமுறைகளின் அடிப்படையில் தரவு மையங்கள் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. சில மாநிலங்கள் இத்துறைக்கு தனிப்பட்ட சலுகைகளையும் வழங்கி வருகின்றன. அதிநவீன, அதிக திறன் கொண்ட தரவு மையங்கள் அமைப்பதற்கு சிறந்த வாய்ப்புகளை கொண்டுள்ள நாடாக இந்தியா உள்ளது. எனவே, தரவு மையங்களுக்கென தனிப்பட்ட கொள்கையை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
– ஜிதின் பிரசாதா, மத்திய தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர்.
