தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ அதானி சிமென்ட் - கிரெடாய் கூட்டு

அதானி சிமென்ட் - கிரெடாய் கூட்டு

அதானி சிமென்ட் - கிரெடாய் கூட்டு


ADDED : ஜூன் 13, 2025 10:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2025 10:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய், அதானி சிமென்ட் நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ளது.

மறுகாடு வளர்ப்பு மற்றும் நகர்ப்புற பசுமைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதற்கான இரு முக்கிய முயற்சிகளை கிரெடாய் துவங்கியுள்ளது. பசுமை இந்தியா திட்டத்தின் கீழ், மஹாராஷ்டிராவின் நாசிக்கில் 9,000 ஏக்கரில், 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவதன் வாயிலாக மறு காடு வளர்ப்பு திட்டம் துவங்கவுள்ளது.

மேலும், அதானி சிமென்ட் நிறுவனத்துடனான கூட்டு வாயிலாக, கிரெடாய் நிறுவனத்தின் கட்டுமானத்துக்கு, அதானி சிமென்ட் பிரீமியம் ஜி.ஆர்.ஐ.எச்.ஏ., சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகள் மற்றும் பசுமை கான்கிரீட் தீர்வுகளை வழங்கும். அத்துடன், கிரெடாயில் பதிவு பெற்ற கட்டுமான நிறுவன ஊழியர்களுக்கு, ஆன் - சைட் தொழில்நுட்ப ஆதரவு மற்றும் பயிற்சியை வழங்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us