ரயில் பெட்டி உற்பத்தி திறன் அதிகரிக்க தனியாருடன் ஒப்பந்தம்
ரயில் பெட்டி உற்பத்தி திறன் அதிகரிக்க தனியாருடன் ஒப்பந்தம்
ADDED : பிப் 22, 2026 02:09 AM

புதுடில்லி: பொதுத்துறை நிறுவனமான, ஆர்.வி.என்.எல்., எனும் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட், ரயில் தயாரிப்பு திறனை அதிகரிக்க, தனியார் நிறுவனமான டெக்ஸ்மேக்கோ உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
ரயில்வேயின் இன்ஜின், பெட்டிகள், சரக்கு வேகன் தயாரிப்பு திறனை பல மடங்கு அதிகரிக்க இந்த கூட்டு உதவும் என கூறப்படுகிறது.
நம் நாடு மட்டுமின்றி, ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தயாரிப்பு மற்றும் கட்டமைப்பு பணிகளை இந்த கூட்டு நிறுவனங்கள் மேற்கொள்ள உள்ளன.
ரயில் போக்குவரத்தில் புதிய பொறியியல் தீர்வுகள், தயாரிப்பு செலவு குறைப்பு, உலகளாவிய தரத்தை உறுதி செய்தல் உள்ளிட்ட ஒருங்கிணைந்த ரயில் தீர்வுகளை இவை வழங்கும்.
இரு நிறுவனங்களின் கூட்டு காரணமாக, உலக ரயில் வரைபடத்தில் இந்தியாவின் நிலை வலுப்பெறும் என்று டெக்ஸ்மேக்கோ நிறுவன பொறியியல் நிர்வாக இயக்குநர் சுதிப்தா முகர்ஜி தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம், பெருநிறுவனங்கள் இடையே ஒத்துழைப்பு மட்டுமல்ல, நாட்டின் தேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான ஒரு அடித்தளமாக விளங்கும் என்றும், நீண்ட கால தொழில்நுட்ப கையாளல் மற்றும் உலக அளவிலான ரயில் திட்டங்களில் பங்கேற்பு கிடைக்கும் என்றும் ஆர்.வி.என்.எல்., தலைவர் சலீம் அகமது கூறினார்.
