ADDED : செப் 25, 2026 06:35 AM

நீர்வாழ் மற்றும் மருத்துவ தாவர இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகள்
நீர்வாழ் தாவரங்கள் மற்றும் மருத்துவ பயன்பாட்டுக்கான தாவர பொருட்களின் இறக்கு மதியை ஒழுங்குபடுத்தும் வகையில், தாவர தனிமைப்படுத்தல் விதிகளில் மத்திய வேளாண் அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. இது தொடர்பாக 2003ம் ஆண்டு தாவர தனிமைப்படுத்தல் உத்தரவின் 6வது அட்டவணையில் மாற்றங்களை செய்து, இரண்டு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
திருத்த உத்தரவி ன்படி, டென்மார்க் நாட்டிலிருந்து அனுபயாஸ் உள்ளிட்ட 64 வகையான திசு வளர்ப்பு முறையில் உற்பத்தி செய்யப்பட்ட நீர்வாழ் தாவரங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தாவரங்கள் வைரஸ் மற்றும் தீங்கு வி ளை விக்கும் பூச்சிகள் இல்லாதவை என்பதற்கான தாவர சுகாதார சான்றிதழ் கட்டாயம்.
சமையல் எண்ணெய் விலையை குறைக்க அரசு வலியுறுத்தல்
இறக்குமதி செய்யப்படும் கச்சா சமையல் எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. இதன்படி கச்சா பாமாயில் மற்றும் கச்சா சோயாபீன் எண்ணெய் வகைகள் மீதான சுங்க வரி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும் சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய் மற்றும் பாமாயில் எண்ணெய் மீதான வரி 32.50 சதவீதத்திலிருந்து 27.50 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
கச்சா சூரியகாந்தி எண்ணெய் மீதான வரி 10 சதவீதத்திலிருந்து பூஜ்யமாகவும், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் மீதான வரி 32.50 சதவீதத்திலிருந்து 22.50 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சில்லரை விலையில் எண்ணெய் விலையை உற்பத்தியாளர்கள் குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
ரஷ்ய சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 35 சதவீதம் உயர்வு
ரஷ்யாவில் இருந்து சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி, கடந்த ஜனவரி முதல் ஜூலை வரையிலான 7 மாதங்களில் 34.70 சதவீதம் அதிகரித்து 11,115 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரஷ்ய சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 8,253 கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த 7 மாதங்களில் ரஷ்யாவிலிருந்து 8.59 லட்சம் டன் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 7.30 லட்சம் டன்னாக இருந்துள்ளது. கடந்த ஜூலையில் மட்டும் 85,600 டன்னாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில் இது 45,100 டன்னாக இருந்தது. ரஷ்யா, சூரியகாந்தி எண்ணெய்யுடன் சோயா எண்ணெயையும் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.
ஆந்திராவின் மதனப்பள்ளியில் தோட்டக்கலை மையம்
தமிழக எல்லையை ஒட்டிய ஆந்திராவின் மதனப்பள்ளி சுற்றுவட்டாரப் பகுதியில் தக்காளி, மா, மலர்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு தோட்டக்கலை பொருட்களை சேமித்தல், பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல், ஏற்றுமதி செய்தல் உள்ளிட்ட அம்சங்களை உள்ளடக்கிய உலகளாவிய தோட்டக்கலை மையம் அமைக்கப்பட உள்ளது.
இம்மையம் அமைக்க மத்திய அரசின் பூர்வோதயா திட்டத்தின் கீழ் 40,000 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட உள்ளது. மேலும் தனியார் நிறுவனங்கள் வாயிலாக 60,000 கோடி ரூபாய் முதலீடு திரட்டப்பட உள்ளது. இதன்படி மொத்தம் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் தோட்டக்கலை மையம் உருவாக்கப்பட உள்ளது. வரும் அக். 2ம் தேதி அடிக்கல் நாட்டப்பட உள்ளது.
