ADDED : ஆக 05, 2026 02:04 AM

முந்திரி (பிரீமியம்)
கடந்த வாரம் : ரூ.1,000
தற்போது : ரூ.1,000
வரத்து சீராக உள்ளது. தரத்தை பொறுத்து 700 முதல் 1,000 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. ஏற்றுமதி அதிகரித்துள்ளது. உள்நாட்டிலும் விற்பனை சூடுபிடித்து உள்ளதால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது.
சந்தை
பண்ருட்டி, கடலுார்.
கொள்ளு
கடந்த வாரம் : ரூ.42.50
தற்போது ரூ.53.80
வரத்து சீராக உள்ளது. விதைப்புக்காக கொள்ளு வாங்குவதால் விலை உயர்ந்து வருகிறது. தேவை அதிகரித்துள்ளதால் மேலும் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சந்தை
வேலுார்.
சின்ன வெங்காயம்
கடந்த வாரம் : ரூ.53.00
தற்போது : ரூ. 55.00
மொத்த விலையில் 35 முதல் 55 ரூபாய் வரைக்கும் சில்லரை விலையில் 60 முதல் 65 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் உற்பத்தி குறைந்துள்ளதால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது.
சந்தை
செட்டிக்குளம், பெரம்பலுார்.
