ADDED : அக் 19, 2025 02:43 AM

புதுடில்லி: விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான சில்லரை விலை பணவீக்கம், கடந்த மாதம் முறையே மைனஸ் 0.07 சதவீதமாகவும்; 0.31 சதவீதமாகவும் குறைந்துள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பணவீக்கம், முந்தைய ஆகஸ்ட் மாதத்தில் முறையே 1.07 சதவீதமாகவும்; 1.26 சதவீதமாகவும் இருந்தது. உணவுப் பொருட்களின் விலை குறைந்ததே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. விவசாய தொழிலாளர்களுக்கான உணவுப் பிரிவு பணவீக்கம் கடந்த மாதம் மைனஸ் 2.35 சதவீதமாக குறைந்துள்ளது. கிராமப்புற தொழிலாளர்களுக்கான பணவீக்கம் மைனஸ் 1.81 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இவை இரண்டும் முறையே 0.47 புள்ளிகள் மற்றும் 0.58 புள்ளிகள் குறைந்துள்ளன.
நாடு முழுதும் 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 787 கிராமங்களில் இருந்து திரட்டப்பட்ட தரவுகளை கொண்டு, மாதந்தோறும் இந்த பணவீக்க தரவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.