அடிப்படை உள்கட்டமைப்பாக உருவெடுக்கும் ஏ.ஐ., தொழில்நுட்பம்
அடிப்படை உள்கட்டமைப்பாக உருவெடுக்கும் ஏ.ஐ., தொழில்நுட்பம்
ADDED : மே 17, 2026 04:21 AM

அ நிறம் | அளவு
செயற்கை நுண்ணறிவு, இனி வெறும் தொழில்நுட்பமாக மட்டுமில்லாமல், சர்வதேச அளவில் நிறுவனங்கள் இயங்குவதற்கான அடிப்படை உள்கட்டமைப்பாக மாறி வருகிறது.
டி.சி.எஸ்., நிறுவனம் தன் 'மனிதன் மற்றும் ஏ.ஐ.,' செயல்பாட்டு மாதிரியை விரிவுபடுத்தியதன் வாயிலாக ஏ.ஐ., சேவைகளில் 21,850 கோடி ரூபாயும், கிளவுட், சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட நவீன சேவைகளில் 1.09 லட்சம் கோடி ரூபாயும் வருவாய் ஈட்டியுள்ளது. உலகளவில் ஏ.ஐ., முதலீடுகளுக்கு இந்தியா தற்போது மிக முக்கிய நாடாக உருவெடுத்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, தொழில்துறைகளுக்கான பிரத்யேக ஏ.ஐ., தளத்தை உருவாக்குவதிலும், இந்தியாவின் முதல் தரவு மையத்தை அமைப்பதிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
- சந்திரசேகரன்
தலைவர், டிசிஎஸ்
