ADDED : ஜூன் 28, 2025 11:02 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி,:ஜிண்டால் குழுமத்தைச் சேர்ந்த ஜே.எஸ்.டபுள்யு., பெயின்ட்ஸ் நிறுவனம், அக்ஸோ நோபல் இந்தியா நிறுவனத்தை 12,915 கோடி ரூபாய்க்கு முழுமையாக கையகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
அக்ஸோ நோபல் இந்தியா நிறுவனம், நெதர்லாந்தைச் சேர்ந்த அக்ஸோ நோபல் என்.வி.,யின் துணை நிறுவனமாகும்.
இந்த கையகப்படுத்தல் வாயிலாக, ஜே.எஸ்.டபுள்யு., பெயின்ட்ஸ், இந்தியாவின் நான்காவது பெரிய பெயின்ட் தயாரிப்பாளராக உருவெடுக்க உள்ளது.