ADDED : மார் 04, 2026 12:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:இந்தியாவில் நவீன டயர் மறுசுழற்சி கட்டமைப்பை உருவாக்க, பிரான்சின் ரெஜ்காம், இந்தியாவின் பிளானெக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்துள்ளன.
டயர் மறுசுழற்சி தொழில் நுட்பத்தில், ரெஜ்காம் நிறுவனம் சிறந்து விளங்குகிறது. இந்நிறுவனத்துடன், கழிவு மேலாண்மை தீர்வுகளை வழங்கும் பிளானெக்ஸ் நிறுவனம் கூட்டு சேர்ந்து, சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்க, பொறுப் பான வாகன கழிவு மறுசுழற்சி நடைமுறைகளை செயற்கை நுண்ணறிவின் வாயிலாக ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளன.
நிலையான நீண்ட கால மதிப்பை வழங்கும் வகையில், நவீன மறுசுழற்சி அமைப்புகள், விரிவுபடுத்தும் டயர் மறுசுழற்சி செயல்பாடுகளை உருவாக்க, இரு நிறுவனங்களும் அதிக கவனம் செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

