உள்ளடக்கத்திற்கு செல்ல

தமிழகத்தில் அமேசான் பஜார் 'ஆர்டர்கள்' 5 மடங்கு அதிகரிப்பு
தமிழகத்தில் அமேசான் பஜார் 'ஆர்டர்கள்' 5 மடங்கு அதிகரிப்பு
ADDED : மே 15, 2026 12:09 AM

அ நிறம் | அளவு
சென்னை : “அமேசான் பஜாரில் பெண்கள் பேஷன், வீட்டு உபயோக, சமையல் அறை பொருட்களை அதிகம் வாங்குகின்றனர்,” என, அமேசானின், அமேசான் பஜார் இந்திய பிரிவு தலைவர் சமீர் லால்வானி தெரிவித்தார்.
சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அமேசான் ஆன்லைன் வணிகத்தில், அமேசான் பஜார் பிரிவின் வளர்ச்சிக்கு, தமிழகம் குறிப்பிடத்தக்க மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் இருந்து பொருட்களுக்கு வரும் ஆர்டர்கள் ஓர் ஆண்டில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளன.
தமிழகத்தில் மட்டும், 'அமேசான்' ஆன்லைன் வணிகத்தில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் உள்ளனர். இதில், அமேசான் பஜாரில் உள்ள 1,700க்கும் மேற்பட்ட விற்பனையாளர்களும் அடங்குவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
