ADDED : ஆக 20, 2025 01:43 AM

கோவை:வரும், 2030க்குள் இந்தியாவில் 'இ - காமர்ஸ்' ஏற்றுமதி 80 பில்லியன் அமெரிக்க டாலர், அதாவது 6.85 லட்சம் கோடி ரூபாய் என்ற இலக்கை எட்ட, கோவை மற்றும் சுற்றுப்பகுதி எம்.எஸ்.எம்.இ., துறையினருக்கு அமேசான் அழைப்பு விடுத்துள்ளது.
கோவையில் செய்தியாளர்களிடம், அமேசான் குளோபல் செல்லிங் இந்தியா தலைவர் ஸ்ரீநிதி கல்வபுடி கூறியதாவது:
இந்திய வர்த்தகத்தின் உலகளாவிய தொடர்பை, இ - காமர்ஸ் வணிகம் மாற்றியமைத்து வருகிறது. ஒவ்வொரு இந்திய தொழில்முனைவோரின் உற்பத்தி பொருளையும், உலகளாவிய சிறந்த பிராண்டாக மாற்றுவதே நோக்கம்.
'அமேசான் குளோபல் செல்லிங்' திட்டத்தை, இந்திய எம்.எஸ்.எம்.இ., விற்பனையாளர்கள் பயன்படுத்தி, உலகளாவிய சந்தைகளில் தங்களது வர்த்தகத்தை விரிவுபடுத்தலாம். அமேசான் வாயிலான இந்திய இ - காமர்ஸ் ஏற்றுமதியை, 2030ல் 80 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவதே நோக்கம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.