ADDED : மே 02, 2025 09:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:ஆப்பிள் நிறுவனம், அமெரிக்க சந்தைக்கான ஐபோன்கள் உற்பத்தியை, பெருமளவில் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மாற்றுவதாக வந்த செய்திகளை, நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம்குக் உறுதிபடுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
அமெரிக்காவின் அதிக வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவைவிட, இந்தியாவில் கட்டணங்கள் குறைவாக இருப்பதால், அமெரிக்க சந்தைகளுக்கான ஐபோன்களில் பாதியை, இந்தியாவில் இருந்து ஆப்பிள் நிறுவனம் வாங்குகிறது. அமெரிக்க சந்தைக்காக வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஆப்பிளின் பிற தயாரிப்புகள் கொண்டு வரப்படுகின்றன.
இனி, அமெரிக்காவில் விற்கப்படும் பெரும்பாலான ஐபோன்களின் பிறப்பிடமாக இந்தியா இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.