அமெரிக்காவின் 'மேஜிக் பேர்' ஏற்றுமதியாளர்கள் ஆர்வம்
அமெரிக்காவின் 'மேஜிக் பேர்' ஏற்றுமதியாளர்கள் ஆர்வம்
ADDED : நவ 10, 2025 11:53 PM

திருப்பூர்: அமெரிக்காவின், சர்வதேச 'மேஜிக் பேர்' இந்தியாவுக்கு நிச்சயம் கைகொடுக்கும் என்ற எதிர்பார்ப்புடன், அதில் பங்கேற்க ஆடை ஏற்றுமதியாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
கடந்த, 2020ல் அமெரிக்காவின் மொத்த ஆடை இறக்குமதி, 6.05 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இந்தியாவின் பங்களிப்பு, 27,213 கோடி ரூபாயாக இருந்தது.
கடந்த 2024ல், அமெரிக்காவின் ஆடை இறக்குமதி, 7.11 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது; இந்தியாவின் பங்களிப்பு, 41,930 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பரஸ்பரம் வர்த்தக உறவு வளர்ச்சியடைந்து வந்த நிலையில், இந்திய பொருட்களுக்கான அமெரிக்காவின் வரிவிதிப்பு, திடீரென 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இத்தகைய சூழலில், 'மேஜிக் பேர்' கண்காட்சி, அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் கண்காட்சி வளாகத்தில், 2026 பிப்., 17ல் துவங்கி, மூன்று நாட்கள் நடக்க உள்ளது.
கண்காட்சியில் பங்கேற்பதற்கான விண்ணப்ப அவகாசம், டிச., 1ம் தேதியுடன் முடிகிறது.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் அதிகாரிகள் கூறுகையில், 'அமெரிக்காவின் வரி உயர்வு பிரச்னை தற்காலிகமானது; தீவிரமாக பேச்சு நடந்து வருவதால், விரைவில் சுமுக வர்த்தக உடன்பாடு எட்டப்படும்.
'அமெரிக்காவில் நடக்க உள்ள 'மேஜிக் பேர்' என்ற கண்காட்சி, நிச்சயம் இந்தியாவுக்கு கைகொடுக்கும். நுாற்றுக்கும் அதிகமான நாடுகளின் வர்த்தகர்கள் இக்கண்காட்சியில் பங்கேற்பர் என்பதால், புதிய வர்த்தக வாய்ப்பு உருவாகும்.
'ஏற்றுமதியாளர்கள் கண்காட்சியில் பங்கேற்க ஆர்வமாக விண்ணப்பித்து வருகின்றனர்' என்றனர்.
அமெரிக்க ஆடை இறக்குமதி இடம் நாடு சதவீதம் 1.சீனா 27.5 2.வியட்நாம் 18.50 3.வங்கதேசம் 7.40 4.இந்தோனேசியா 5.20 5. இந்தியா 4.50
அமெரிக்காவில், 2026 பிப்., 17ல் துவங்கி, மூன்று நாட்கள் சர்வதேச கண்காட்சி கண்காட்சியில் பங்கேற்பதற்கு விண்ணப்ப அவகாசம், டிச., 1ம் தேதியுடன் நிறைவு

