உள்ளடக்கத்திற்கு செல்ல
UPDATED : அக் 12, 2026 02:26 PM
ADDED : அக் 12, 2026 02:24 PM
அ நிறம் | அளவு
கேள்வி: ஒரு சிறு உற்பத்தி நிறுவனம், பெரிய நிறுவனத்தின் சப்ளையராக எப்படி மாறலாம்?
பதில்: குறிப்பிட்ட தொழில் துறையில் நிபுணத்துவம் பெற்ற தொழில் குழுமங்களில் இணைவது சிறு நிறுவனங்களுக்கு பெரிய நிறுவனங்களுடன் வணிக தொடர்பு ஏற்படுத்த நல்ல வாய்ப்பை தரும். இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட பல துறைகளில் 440க்கும் மேற்பட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் மையங்கள் உள்ளன. இத்தகைய மையங்கள், இந்தியாவில் தொழில் தொடங்கும் பெரிய நிறுவனங்களுக்கு தேவையான உள்ளூர் சப்ளையர்களை எளிதாக கண்டறிய உதவும் வலுவான தொழில் கட்டமைப்பை உருவாக்குகின்றன. இந்தியாவின் டிஜிட்டல் வசதிகளும், தேசிய மின் கட்டமைப்பும் உற்பத்தி துறைக்கு கூடுதல் பலமாக உள்ளன.
டான் சூ ஷான்
சி.இ.ஓ., டெவலப்மென்ட் பேங்க் ஆப் சிங்கப்பூர் (டி.பி.எஸ்.,)
