UPDATED : அக் 19, 2026 12:00 AM
ADDED : அக் 18, 2026 04:35 AM

கோ வை, சின்னவேடம்பட்டியைச் சேர்ந்த இன்டெரோ பேக்டெக் நிறுவனம், உணவுத்துறைக்கான நவீன பேக்கேஜிங் இயந்திரங்களை தயாரித்து வருகிறது.
நிறுவனத்தின் இயக்குனர் தேவகுமார் கூறியதாவது:
கடந்த 23 ஆண்டுகளாக உணவுப் பொருட்களுக்கான நவீன பேக்கேஜிங் இயந்திரங்களை தயாரித்து வருகிறோம். ‘பவுச் பேக்கேஜிங்’, உணவு பேக்கேஜிங், ‘பில்லிங்’, ‘சீலிங்’, ‘ராப்பிங்’, ‘ஸ்ட்ரேபிங்’ உள்ளிட்ட பல்வேறு வகையான இயந்திரங்களை உற்பத்தி செய்கிறோம்.
எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் மற்றும் மகளிர் தொழில் முனைவோரின் தேவைகளை கருத்தில் கொண்டு இயந்திரங்கள் வடிவமைக்கப்படுகின்றன. இயந்திரங்களை நிறுவுதல், இயக்குவதற்கான பயிற்சி மற்றும் தொடர்ந்து சர்வீஸ் வழங்கப்படுகிறது. இதன்மூலம் உணவுப் பொருட்கள் சுகாதாரமான மற்றும் பாதுகாப்பான முறையில் பேக்கேஜிங் செய்யப்பட்டு சந்தைக்கு கொண்டு செல்ல உதவுகிறது.
பேக்கேஜிங்கில் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம். தற்போது கோவை, சென்னை, பெங்களூரு, கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கிளைகள் செயல்பட்டு வருகின்றன. தென்னிந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களில் பயணிகளின் ‘லக்கேஜ் ராப்பிங்’ மற்றும் பேக்கேஜிங் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் இயந்திரங்களையும் தயாரித்து வருகிறோம்.
சிறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தியை அதிகரிப்பது, மனித உழைப்பை குறைப்பது மற்றும் பேக்கேஜிங் தரத்தை உயர்த்துவது எங்கள் நோக்கம். சிறந்த பேக்கேஜிங், சிறந்த எம்.எஸ்.எம்.இ., உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் நிறுவனம் பெற்றுள்ளது. தரமான இயந்திரங்கள், வாடிக்கையாளர் சேவை மற்றும் சிறு தொழில், மகளிர் தொழில் முனைவோருக்கான ஆதரவுடன் தென்னிந்திய பேக்கேஜிங் ஆட்டோமேஷன் துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் விபரங்களுக்கு: 93618 77345
