தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ புதிய பொலிவுடன் 'பலேனோ'

 புதிய பொலிவுடன் 'பலேனோ'

 புதிய பொலிவுடன் 'பலேனோ'


ADDED : செப் 08, 2026 07:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 07:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: மாருதி சுசூகி நிறுவனம், பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில், புதிய வடிவம் மற்றும் நவீன பாதுகாப்பு வசதிகள் கொண்ட 'ஸ்டன்னிங் நியூ பலேனோ' காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், 'டேர் டூ கோ கிளாம்' என்ற கருத்தாக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய பலேனோ காரின் காட்சியக ஆரம்ப விலை 6.09 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரிவிலேயே முதல்முறையாக ரேடார் மற்றும் கேமரா வாயிலாக இயங்கும் 'லெவல்- - 2 ஏ.டி.ஏ.எஸ்' தொழில்நுட்பத்தை மாருதி சுசுகி அறிமுகப்படுத்தியுள்ளது. தானியங்கி அவசரகால பிரேக்கிங், வாகனத்தின் பாதையை கண்காணிக்கும் லேன் டிபார்ச்சர் வார்னிங், அடாப்டிவ் குரூஸ் கன்ட்ரோல், ஹை பீம் அசிஸ்ட் மற்றும் முன்புற மோதல் எச்சரிக்கை அமைப்பு ஆகிய வசதிகள் இதில் இடம் பெற்றுள்ளன.

ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம், ஏ.பி.எஸ்., போன்ற பாதுகாப்பு அம்சங்களும் இந்த காருடன் வழங்கப்படுகின்றன.

இந்த காரை, தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிமைக்க விரும்புபவர்களுக்காக, 'எலெக்ராண்டே கலெக் ஷன்' மற்றும் 'நோவோ-ஸ்பிரிட் கலெக் ஷன்' என இரண்டு பிரத்யேக அக்சஸரீஸ் தொகுப்புகளையும் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us