தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ வங்கிகளின் கமிஷன் 15 சதவீதம் அதிகரிப்பு

வங்கிகளின் கமிஷன் 15 சதவீதம் அதிகரிப்பு

வங்கிகளின் கமிஷன் 15 சதவீதம் அதிகரிப்பு


ADDED : ஜூன் 13, 2025 10:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2025 10:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:காப்பீடு, மியூச்சுவல் பண்டு விற்பனை வாயிலாக, பொதுத்துறை வங்கிகள், கடந்த நிதியாண்டில் 15 சதவீதம் அளவுக்கு அதிக கமிஷன் ஈட்டியுள்ளன.

பொதுத்துறை வங்கிகளின் வட்டியில்லாத பிற வருவாய் அதிகரித்து வருவது நல்ல முன்னேற்றமாகவே பார்க்கப்படுகிறது. எனினும், வாடிக்கையாளருக்கு பொருந்தாத காப்பீடு திட்டங்கள், மியூச்சுவல் பண்டு திட்டங்களை விற்பனை செய்வதாக பொதுத்துறை வங்கிகளின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், ரிசர்வ் வங்கி கவர்னரும் வங்கி உயர் அதிகாரிகளை எச்சரித்துள்ளனர்.

2024 - 25 கமிஷன் நிலவரம்


வங்கிகள் காப்பீடு மியூச்சுவல் பண்டு
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் 36 -
இந்தியன் பேங்க் 181 -
கனரா பேங்க் 557 -
பேங்க் ஆப் மகாராஷ்டிரா 51 0.06
பேங்க் ஆப் இந்தியா 273 8
யூகோ பேங்க் 62 2
எஸ்.பி.ஐ., 2,767 1,783
பஞ்சாப் நேஷனல் பேங்க் 480 11
பேங்க் ஆப் பரோடா 356 143
மொத்தம் 4,763 1,947
ரூ. கோடியில்



நாட்டின் 12 பொதுத்துறை வங்கிகளில், ஒன்பது முக்கிய வங்கிகள் கமிஷனாக திரட்டிய தொகை


2023 - 24: 5,808 கோடி ரூபாய்
2024-25: 6,710 கோடி ரூபாய் 15 சதவீதம் உயர்வு.
காப்பீடு திட்ட கமிஷன்
2023 - 24: 4,469 கோடி ரூபாய்
2024-25 4,763 கோடி ரூபாய்.
மியூச்சுவல் பண்டு கமிஷன்
2023 - 24: 1,339 கோடி ரூபாய்
2024-25: 1,947 கோடி ரூபாய்
காப்பீடுகளைப் பொறுத்தவரை ஆயுள் மற்றும் ஆயுள் அல்லாத காப்பீடுகள் இரண்டும் அடங்கும். இவை தவிர மத்திய அரசின் ஜீவன் ஜோதி பீமா யோஜனா, சுரக்ஷா பீமா யோஜனா உள்ளிட்ட காப்பீட்டு திட்டங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us