உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 15, 2024 09:56 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி,:சுங்க வரி வேறுபாடு காரணமாக, வங்கிகள், வெள்ளி இறக்குமதியை நிறுத்தியுள்ளன.
உலகின் மிகப்பெரிய வெள்ளி நுகர்வோரான இந்தியா, வெள்ளியின் மீது 15 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கிறது.
ஆனால், கடந்த 2022ம் ஆண்டு, ஐக்கிய அரபு எமிரேட்சுடன் செய்து கொண்ட விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின் வாயிலாக, தனியார் வர்த்தகர்கள் ஐ.ஐ.பி.எக்ஸ்., எனப்படும் 'இந்திய இன்டர்நேஷனல் புல்லியன் எக்ஸ்சேஞ்ச்' வாயிலாக, வெள்ளியை 9 சதவீத வரியிலும், மதிப்பு கூடுதல் வரியாக 3 சதவீதமும் செலுத்தி, இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது.
வங்கிகள், 15 சதவீத வரி செலுத்த வேண்டிஉள்ளது. இதனால் வெள்ளி இறக்குமதியை நிறுத்தும் முடிவுக்கு வந்துள்ளன வங்கிகள்.
