ADDED : நவ 21, 2024 02:18 AM

சென்னை:முன்னணி கட்டுமான நிறுவனமான, 'காசாகிராண்ட்', தனது 1,000 ஊழியர்களை, நிறுவனத்தின் செலவில் வெளிநாட்டுச் சுற்றுலா அழைத்துச் செல்கிறது.
லாபத்தில் இருந்து சலுகை என்ற அடிப்படையில், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவுக்கு, ஒரு வார சுற்றுலா செல்ல இந்நிறுவனம் ஏற்பாடு செய்து உள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் வருவாயில், ஊழியர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும், கடின உழைப்பை கவுரவிக்கும் விதமாகவும், இந்த சுற்றுலா வாய்ப்பை வழங்குவதாக காசாகிராண்ட் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில், இதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு இந்நிறுவன ஊழியர்கள் சுற்றுலா சென்று வந்தனர். பணியிடத்தில் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு, நிறுவனம் மதிப்பளிப்பதை ஊழியர்கள் உணரச் செய்வதை, இதுபோன்ற வெளிநாட்டு சுற்றுலா பயணங்கள் பிரதிபலிப்பதாகவும் காசா கிராண்ட் தெரிவித்துள்ளது.

