உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மே 06, 2026 06:58 AM

அ நிறம் | அளவு
புதுடில்லி : மத்திய பொது நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ், மெட்டாமைண்டு மற்றும் கிரிஸ்டெல்லர் நிறுவனங்களுடன் முத்தரப்பு ஒப்பந்தம் செய்துள்ளது.
ராணுவம், இதர துறைகளுக்கான எதிர்கால தொழில்நுட்பங்களை உருவாக்க இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
சைபர் பாதுகாப்பு, மின்னணு போர் முறை, செமிகண்டக்டர் தொழில்நுட்பம், தகவல் சேமிப்பு மையங்கள், ராணுவம் மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒன்றிணைந்து செயல்பட உள்ளன. பாரத் எலக்ட்ரானிக்ஸ், ராணுவ உற்பத்தியிலும் மெட்டாமைண்டு நிறுவனம், செயற்கை நுண்ணறிவு துறையிலும் சிறந்து விளங்குகின்றன.
