ராணுவ மின்னணு பாக உற்பத்தி 'பெல்' - 'சாஸ்மோஸ்' ஒப்பந்தம்
ராணுவ மின்னணு பாக உற்பத்தி 'பெல்' - 'சாஸ்மோஸ்' ஒப்பந்தம்
ADDED : மார் 08, 2026 01:51 AM

பெங்களூரு:ராணுவ மின்னணு பாகங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய, மத்திய அரசின் பொது நிறுவனமான பெல் என்ற பாரத் எலக்ட்ரானிக்ஸ், சாஸ்மோஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
பாதுகாப்புத்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங் முன்னிலையில், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் மனோஜ் ஜெயின், சாஸ்மோஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரசேகர் ஆகியோர் ஒப்பந்தம் செய்தனர்.
இந்த கூட்டணியின் வாயிலாக உள்நாட்டு ராணுவ மின்னணு பாகங்களின் உற்பத்தியை பலப்படுத்துவது மட்டுமின்றி, ராணுவ அமைப்புகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது, முக்கிய உதிரிபாகங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வது, வினியோக தொடரை வலுப்படுத்துவது ஆகியவற்றை மேற்கொள்ளவும் உதவும்.
விமானப்படை, தரைப்படை, கடற்படை ஆகிய முப்படைக்கும் தேவையான மின்னணு உதிரிபாகங்களும் இதில் உற்பத்தி செய்யப்படும்.
சாஸ்மோஸ் நிறுவனம், பெங்களூரை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. ராணுவ, விமான மின்னணு உதிரிபாகங்களை உற்பத்தி செய்வதில் சிறந்து விளங்குகிறது.
