ADDED : ஜன 22, 2026 01:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: கடந்தாண்டு, 'பீம்' செயலி வாயிலாக மேற்கொள்ளப்பட்ட பணப்பரிவர்த்தனைகள், நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக, தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டு ஜனவரி மாதம், கிட்டத்தட்ட 3.90 கோடியாக இருந்த பரிவர்த்தனை எண்ணிக்கை, டிசம்பரில் 16.51 கோடியாக அதிகரித்துள்ளது.
என்.பி.சி.ஐ., எனும் தேசிய பண பரிவர்த்தனை கழகம், கடந்தாண்டு மார்ச் மாதம், 'பீம் 3.0' செயலியை அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, செயலியின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பரில் மட்டும், 2.21 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகள், செயலி வாயிலாக மேற்கொள்ளப்பட்டன.

