மின்சார டிராக்டருக்கு தரச்சான்று முதல் முறையாக பி.ஐ.எஸ்., ஏற்பாடு
மின்சார டிராக்டருக்கு தரச்சான்று முதல் முறையாக பி.ஐ.எஸ்., ஏற்பாடு
ADDED : டிச 30, 2025 01:12 AM

புதுடில்லி: மின்சார டிராக்டருக்கு நாட்டின் முதலாவது பரிசோதனை தரச்சான்றை பி.ஐ.எஸ்., எனப்படும் இந்திய தர நிர்ணய முகமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது:
'ஐ.எஸ்., 19262:2025 மின்சார வேளாண் டிராக்டர் -தர விதிகள்' என்ற பெயரில், தரச்சான்றை மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டார். டில்லி, பாரத மண்டபத்தில் கடந்த 24ம் தேதி நடைபெற்ற தேசிய நுகர்வோர் தினவிழாவில் இது வெளியிடப்பட்டது.
பி.ஐ.எஸ்., உருவாக்கியுள்ள இந்த ஒரே மாதிரியான பரிசோதனை நடைமுறைகள் வாயிலாக, மின்சார டிராக்டரின் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, சிறந்த செயல்பாடு மதிப்பிடப்பட்டு சான்றளிக்கப்படும். பவர் டேக்ஆப், பெல்ட், புல்லிங் எனப்படும் இழுவை சக்தி, அதிர்வு அளவீடு, உதிரிபாக ஆய்வு ஆகியவை இதில் பரிசோதிக்கப்படும்.
வேளாண் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் டீசல் டிராக்டர்கள் மற்றும் மின்வாகனங்களுக்கென இப்போதுள்ள தரநிலைகள் அனைத்தும் மின்சார டிராக்டர் தயாரிப்புக்கும் பொருந்தும்.
அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைநிலையங்கள் வாயிலாக, மின்சார டிராக்டர் சான்றளிக்கப்படும் என்பதால், துாய எரிசக்தி பயன்பாடு தொழில்நுட்பம் காரணமாக காற்று மாசு வெளியீடு குறைய வழி ஏற்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மற்ற மின்வாகனங்கள் போல், பேட்டரி திறனில் மின்சார டிராக்டர் இயங்கும் வேளாண் பணிகளில் முக்கிய பங்கு வகிக்கும் டிராக்டருக்கான செலவு குறைய வாய்ப்பு குறைந்த சத்தம், மாசு வெளியீடு, பராமரிப்பு செலவு ஆகியவை சாதகமான அம்சங்கள்

