'பின்டெக் டவரில்' அலுவலகங்கள் ஒதுக்கீடு பெற முன்பதிவு துவக்கம்
'பின்டெக் டவரில்' அலுவலகங்கள் ஒதுக்கீடு பெற முன்பதிவு துவக்கம்
ADDED : டிச 16, 2025 01:13 AM

சென்னை: தமிழகத்தில் நிதி, வங்கி, காப்பீடு ஆகிய துறைகளை சேர்ந்த நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையம் அருகில், 110 ஏக்கரில், 'பின்டெக் சிட்டி' எனப்படும் நிதிநுட்ப நகரை, 'டிட்கோ' அமைத்து வருகிறது.
அந்த வளாகத்தில், நிதி துறையை சேர்ந்த நிறுவனங்களுக்கு அலுவலக இடங்களை குத்தகைக்கு விடுவதற்கு, 5.50 லட்சம் சதுர அடியில், 236 கோடி ரூபாய் செலவில் நிதிநுட்ப கோபுரம் சர்வதேச தரத்தில் அமைக்கப்படுகிறது.
இதில் இரண்டு கீழ்தளங்கள், ஒன்பது மாடிகளுடன் கட்டப்பட்டுள்ளது. தற்போது, கட்டுமான பணி முடிவடையும் நிலையில் உள்ளது.
அங்குள்ள அலுவலக இடங்களை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வதற்கான முன்பதிவு செய்யும் பணியை டிட்கோ துவக்கியுள்ளது. இதற்கு சதுர அடிக்கு வாடகையாக மாதம், 85 ரூபாய், பராமரிப்புக்கு, 15 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

