ADDED : ஜன 02, 2026 12:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாடு முழுதும் தனது வாடிக்கையாளர்களுக்கு வை - பை காலிங் வசதியை, பி.எஸ்.என்.எல்., அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி வாயிலாக, வை - பை நெட்வொர்க்கில் அழைப்புகள், குறுஞ்செய்திகளை பெறவும், அழைக்கவும் இயலும்.
குறிப்பாக, கிராமப்புற, பின்தங்கிய பகுதிகளில் பி.எஸ்.என்.எல்., பாரத் பைபர் அல்லது மற்ற பிராட்பேண்டு வை - பை சேவை வாயிலாக இதை பயன்படுத்தலாம்.
வேறு செயலி உதவி ஏதுமின்றி, தங்களிடம் தற்போதுள்ள மொபைல் போன்களிலேயே இந்த வசதியை பெற இயலும். போனில் வை - பை காலிங் என்ற வசதியை ஆன் செய்தாலே போதும் என்றும் பி.எஸ்.என்.எல்., தெரிவித்துள்ளது.

