உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 10, 2026 02:24 AM

அ நிறம் | அளவு
புதுடில்லி: தொலைதுார மற்றும் மொபைல் சிக்னல் கிடைக்காத பகுதிகளிலும் தகவல் தொடர்பு வசதியை வழங்கும் வகையில், 1.34 லட்சம் ரூபாய் விலையில் சாட்டிலைட் போனை பி.எஸ்.என்.எல்., அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து 'எக்ஸ்' தளத்தில் இந்நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில்,' பாதுகாப்புப் படைகள், பேரிடர் மீட்புப் பணிகள், சுரங்க தொழில், போன்ற சவாலான சூழல்களில் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது' என குறிப்பிடப்பட்டுள்ளது.
