தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/பட்ஜெட் செய்திகள் தலைவர்கள் கருத்து

பட்ஜெட் செய்திகள் தலைவர்கள் கருத்து

பட்ஜெட் செய்திகள் தலைவர்கள் கருத்து


UPDATED : பிப் 02, 2026 04:58 AM

ADDED : பிப் 02, 2026 01:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 02, 2026 04:58 AM ADDED : பிப் 02, 2026 01:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மக்கள் விரோதம்! மத்திய அரசின் பட்ஜெட் திசையற்றது; தொலைநோக்கு பார்வை இல்லாதது; செயலற்றது மற்றும் மக்கள் விரோதமானது. இது, பெண்களுக்கும், விவசாயிகளுக்கும், கல்விக்கும், பல்வேறு சமூகங்களுக்கும் எதிரானது. இந்த பட்ஜெட்டில் மேற்கு வங்கத்துக்கு எதுவும் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்ததே இதற்கு சாட்சி. - மம்தா பானர்ஜி மே.வங்க முதல்வர், திரிணமுல்




தொலைநோக்கு பார்வை! மத்திய பட்ஜெட், 'வளர்ச்சியடைந்த பாரதம் 2047' என்ற இலக்கை நோக்கிய இந்தியாவின் பயணத்தில், உள்கட்டமைப்புக்கு மிக முக்கிய இடத்தை அளித்துள்ளது. இதில், அறிவிக்கப்பட்ட முன்முயற்சிகள் ஒரு தெளிவான தொலைநோக்கு பார்வையை பிரதிபலிக்கின்றன. விவசாயிகள், இளைஞர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மையமாக கொண்ட ஒரு உறுதியான செயல்திட்டத்தை பட்ஜெட் கோடிட்டு காட்டுகிறது. - நிதின் கட்கரி மத்திய அமைச்சர், பா.ஜ.,


தடம்புரண்ட சீர்திருத்த ரயில்! விவசாயிகளுக்கோ, வேலையில்லா இளைஞர்களுக்கோ, தொழிலாளர்களுக்கோ, பட்டியல் சாதியினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என யாருக்கும் இந்த பட்ஜெட்டால் எந்த பயனும் இல்லை. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை. சீர்திருத்த விரைவு ரயில், நிலையத்தை விட்டு புறப்படுவதற்கு முன்பே தடம் புரண்டுவிட்டது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. - ரன்தீப் சுர்ஜேவாலா பொதுச் செயலர், காங்கிரஸ்


மந்தமான பட்ஜெட்! மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆற்றிய பட்ஜெட் உரை வெளிப்படைத்தன்மையற்றதாக இருந்தது. முக்கிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து எந்த தகவலும் வழங்கப்படவில்லை. ஒன்றரை மணி நேரம் பேசியிருந்தாலும், மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த பட்ஜெட் உரை முற்றிலும் மந்தமாகவே இருந்தது. - ஜெய்ராம் ரமேஷ் பொதுச் செயலர், காங்கிரஸ்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us