தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ ஏலக்காய் விலை ரூ.500 வீழ்ச்சி

 ஏலக்காய் விலை ரூ.500 வீழ்ச்சி

 ஏலக்காய் விலை ரூ.500 வீழ்ச்சி


ADDED : மார் 23, 2026 01:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 23, 2026 01:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:மேற்காசிய போரால் ஏற்றுமதி பாதிக்கப்பட்ட நிலையில், உள்நாட்டு தேவையும் குறைந்ததால் ஏலக்காய் விலை கிலோவுக்கு 500 ரூபாய் வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏலக்காய் வர்த்தகர் தனவந்தன் கூறியதாவது:

''மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏலக்காய் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கவுதமாலா ஏலக்காய் உற்பத்தி குறைந்ததால் கடந்த 2025 ஏப்., முதலே ஏலக்காய் விலை உயர்ந்து வருகிறது. கடந்த பிப்ரவரியில் ஏலக்காய் விலை ஒரு கிலோ உள்நாட்டில் 2,600 ரூபாய் என்றும், ஏற்றுமதி விலை 2,950 ரூபாய் என்றும் விற்பனையானது.

கடந்த பிப்., 28ம் தேதி போர் துவங்கிய பின் ஏற்றுமதி செய்யப்பட்ட ஏலக்காய் கன்டெய்னர்கள், ஹார்முஸ் ஜலசந்தியை கடக்காததால் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டு விட்டன. இந்நிலையில், ஏலக்காயின் விலை குறைந்துள்ளது. நேற்று ஒரு கிலோ ஏலக்காய் 2,100 ரூபாய்க்கு விற்பனையானது'', என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us