தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ டிரோன்களில் சரக்கு போக்குவரத்து சென்னை ஐ.ஐ.டி., சோதனை வெற்றி

 டிரோன்களில் சரக்கு போக்குவரத்து சென்னை ஐ.ஐ.டி., சோதனை வெற்றி

 டிரோன்களில் சரக்கு போக்குவரத்து சென்னை ஐ.ஐ.டி., சோதனை வெற்றி


ADDED : ஏப் 21, 2026 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2026 05:44 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: நகர்ப்புற பகுதிகளில் டிரோன் வாயிலாக, சரக்கு போக்குவரத்து மேற்கொள்ளும் வகையிலான, சென்னை ஐ.ஐ.டி.,-பெடக்ஸ் நிறுவனம் நடத்திய சோதனை முயற்சி வெற்றியடைந்துள்ளது.

உலகின் மிகப்பெரிய சரக்கு போக்குவரத்து நிறுவனமான, பெடக்ஸ் நிறுவனம், சென்னை ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து, நகர்ப்புற பகுதிகளில், டிரோன் வாயிலாக சரக்கு போக்குவரத்து சேவை வழங்குவதற்கான சோதனையை நடத்தியது.

சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள பெடக்ஸ் ஸ்மார்ட் மையத்தின் ஆராய்ச்சி கட்டமைப்பின் கீழ் நடத்தப்பட்ட இந்த சோதனை முயற்சி, வெற்றியடைந்துள்ளது.

இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., பெடக்ஸ் ஸ்மார்ட் மையத்தின் பேராசிரியர், சத்யநாராயணன் சக்ரவர்த்தி கூறுகையில்,

டிரோன் சரக்கு போக்குவரத்து சோதனைகள், எங்கள் கண்டுபிடிப்பில் முன்னேற்றத்தை அளித்துள்ளது. நகர்ப்புற சரக்கு போக்குவரத்தில், மேம்பட்ட ஏரியல் ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் வழியே, உலகளாவிய லாஜிஸ்டிக்ஸ் துறையை மறுவரையறை செய்ய முடியும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us