உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : மார் 19, 2026 01:08 AM

அ நிறம் | அளவு
சென்னை : வாகன டயர் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் சியட் டயர்ஸ் நிறுவனத்துக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதுார் அருகில் தொழிற்சாலை உள்ளது.
இந்நிறுவனம், ஆலையை விரிவாக்கும் திட்டத்துக்காக, 1,300 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்து உள்ளது.
இதற்கான கட்டுமான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. ஆலையின் விரிவாக்கத்தை அடுத்து, டயர் உற்பத்தி திறன் ஆண்டுக்கு, 95 லட்சம் டயர்களில் இருந்து, 1.40 கோடி டயர்களாக அதிகரிக்க உள்ளது.
