சோடியம் அயான் பேட்டரி தயாரிக்க தமிழகத்தில் முயற்சி தீவிரம் காட்டும் மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம்
சோடியம் அயான் பேட்டரி தயாரிக்க தமிழகத்தில் முயற்சி தீவிரம் காட்டும் மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம்
ADDED : ஆக 23, 2025 12:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மின் வாகனம், மொபைல் போன் போன்றவற்றில் பயன்படுத்தப்படும், 'லித்தியம் அயான் பேட்டரிக்கு' மாற்றாக, 'சோடியம் அயான் பேட்டரியை' தயாரிக்கும் முயற்சியில் மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் ஈடுபட்டு உள்ளது.
இதற்கான முயற்சியில், சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கழகத்தின் கீழ், சி.இ.சி.ஆர்.ஐ., எனப்படும் மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம் ஈடுபட்டுள்ளது.
பேட்டரியை தயாரிக்கும் முயற்சிகள் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, சென்னை தரமணியில் உள்ள மத்திய மின் வேதியியல் ஆய்வகங்களில் நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.