பெட்ரோல் பங்க் உரிம விதிமுறை எளிதாக்க மத்திய அரசு முடிவு
பெட்ரோல் பங்க் உரிம விதிமுறை எளிதாக்க மத்திய அரசு முடிவு
ADDED : ஆக 10, 2025 11:28 PM

புதுடில்லி:பெட்ரோல் பங்க் உரிமம் பெறுவதற்கான விதிமுறைகளை மேலும் எளிதாக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு, பெட்ரோல் பங்க் உரிமம் பெறுவதற்கான விதிமுறைகளை தளர்த்தி, எண்ணெய் அல்லாத நிறுவனங்களும் எரிபொருள் சில்லரை விற்பனை வணிகத்தில் நுழைவதற்கான கதவுகளை அரசு திறந்தது.
இந்நிலையில், வேகமாக வளர்ந்து வரும் எரிபொருள் சந்தையில் பெட்ரோல் பங்க்குகள் அமைப்பதற்கான விதிமுறைகளை மேலும் தளர்த்துவது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து, போக்கு வரத்து எரிபொருட்களை சந்தைப்படுத்துவதற்கான உரிமம் வழங்குவதற்கான 2019ம் ஆண்டு வழிகாட்டு தல்களை மறுபரிசீ லனை செய்ய, பெட்ரோலிய துறை அமைச்சகம் நான்கு பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது.
இக்குழு கார்பன் நீக்கம், மின் வாகன பயன்பாடு மற்றும் மாற்று எரிபொருளை ஊக்குவித்தல் உள்ளிட்டவற்றுக்கான தேசிய உறுதிப்பாட்டு கொள்கைகளை சீரமைக்கும்.
ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்களை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களை நிவர்த்தி செய்யும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பொதுமக்களும், பங்குதாரர்களும் 14 நாட்களுக்குள் தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.