தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த மத்திய ரயில்வே ஆலோசனை

சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த மத்திய ரயில்வே ஆலோசனை

சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த மத்திய ரயில்வே ஆலோசனை


UPDATED : அக் 16, 2026 03:56 PM

ADDED : அக் 16, 2026 03:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 03:56 PM ADDED : அக் 16, 2026 03:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாசிக்: நாசிக் மாவட்டத்தின் தொழில் மற்றும் வேளாண் துறைகளை ரயில் சரக்கு போக்குவரத்துடன் இணைத்து, புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், மத்திய ரயில்வேயின் புசாவல் கோட்டம் சார்பில் தொழில்துறையினருடனான ஆலோசனைக் கூட்டம் நாசிக்கில் நடந்தது.

இதில் தொழில்துறை, வேளாண்மை, சரக்கு போக்குவரத்து மற்றும் மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த சுமார் 200 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

புசாவல் கோட்ட ரயில்வே மேலாளர் புனித் அகர்வால் தலைமையில் நடந்த கூட்டத்தில், ரயில்வே நிர்வாகத்துக்கும் தொழில்துறையினருக்கும் இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், சரக்கு போக்குவரத்துக்கான புதிய வாய்ப்புகளை ஆராய்தல், தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்து சிக்கல்களுக்கு தீர்வு காணுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

சரக்கு ரயில் பெட்டிகள் மற்றும் வேகன்களின் இருப்பு, சரக்கு ஏற்றும் முனையங்களின் செயல்பாடு, சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ரயில்வே அதிகாரிகள் விளக்கினர். ரயில் சரக்கு சேவைகளை எளிதில் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தொழில்துறையினரின் தேவைகளுக்கு ஏற்ப ரயில்வே சேவைகளை மேம்படுத்தி, ரயில் வழி சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பது என வலியுறுத்தப்பட்டது.

Source: https://www.freepressjournal.in/pune/nashik-central-railway-holds-industry-meet-to-boost-rail-freight-and-logistics

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us