ADDED : செப் 04, 2026 07:24 AM

புதுடில்லி: மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, 2025 - -26ம் ஆண்டுக்கான மொத்த உணவு தானிய உற்பத்தி 37.65 கோடி டன்னாக இருக்கும் எனவும், இது முந்தைய ஆண்டில் பதிவான 35.77 கோடி டன்னைவிட 1.88 கோடி டன் அதாவது 5.3 சதவீதம் அதிகம் என மத்திய நுகர்வோர் அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 2023ல் தொடங்கப்பட்ட தானிய சேமிப்புத் திட்டம், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக தற்போது நாடு முழுதும் 313 தொடக்க வேளாண் சங்கங்களில் கிடங்கு கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு 1.80 லட்சம் டன்னுக்கும் அதிகமான சேமிப்பு திறன் உருவாக்கப்பட்டுள்ளதாக, அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உணவு தானிய உற்பத்தி
2024-25 35.77 கோடி டன்
2025-26 37.65 கோடி டன்
உயர்வு 1.88 கோடி டன்
வளர்ச்சி விகிதம் 5.30%
ஆதாரம்: இந்திய உணவு கழகம் (*மதிப்பீடு)
