தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ கன்டெய்னரில் கையாளாத சரக்குகள் 80% கட்டண சலுகை அறிவிப்பு சென்னை துறைமுகம் முடிவு

 கன்டெய்னரில் கையாளாத சரக்குகள் 80% கட்டண சலுகை அறிவிப்பு சென்னை துறைமுகம் முடிவு

 கன்டெய்னரில் கையாளாத சரக்குகள் 80% கட்டண சலுகை அறிவிப்பு சென்னை துறைமுகம் முடிவு


ADDED : ஜூன் 19, 2026 06:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2026 06:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: கன்டெய்னர் அல்லாத சரக்குகளை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்வதற்கான துறைமுக கட்டணத்தில் 80 சதவீதம் வரை சலுகை அளிக்கப்படும்' என, சென்னை துறைமுகம் அறிவித்துள்ளது.

நாட்டில் உள்ள 12 பெரிய துறைமுகங்களில் மூன்றாவது இடத்தில் சென்னை துறைமுகம் உள்ளது. படிப்படியாக வளர்ந்து இன்று இந்த துறைமுகத்தில், 24 கப்பல்கள் நிறுத்தும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. கார்கள், கன்டெய்னர்கள், உரம், எண்ணெய் உள்ளிட்டவை அதிகளவில் கையாளப்படுகின்றன.

இதுகுறித்து, சென்னை துறைமுக அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை துறைமுகத்தில் கூடுதல் சரக்குகளை கையாள, அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறோம். இதேபோல், ஏற்றுமதி, இறக்குமதிகளை ஊக்குவிக்கும் வகையில், பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறோம்.

கன்டெய்னர் அல்லாத சரக்குகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வதற்கான துறைமுக அடிப்படை கட்டண சலுகையை அறிவித்துள்ளோம்.

இதில், பொருட்களுக்கு ஏற்றார்போல், அதிகபட்சமாக 80 சதவீதம் வரை சலுகை பெற முடியும். அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்கள், இரும்பு, உரங்கள், ஜிப்சம் போன்ற பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதிக்கு இந்த சலுகை வழங்கப்படும். அதேபோல், நீண்ட கால அடிப்படையில் இணைந்து பணியாற்றும் நிறுவனங்களுக்கும், வணிகர்களுக்கும் பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறோம்.

இதுபோன்ற சலுகைகள், அதிக பொருட்களை கையாளுவதால், சென்னை துறைமுகத்தின் வளர்ச்சிக்கு உதவும். மற்றொருபுறம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வோரும் பயனடைவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us