இந்திய ரப்பர் பொருட்களுக்கு சீனா கூடுதல் வரி விதிப்பு
இந்திய ரப்பர் பொருட்களுக்கு சீனா கூடுதல் வரி விதிப்பு
UPDATED : மார் 14, 2026 01:46 AM
ADDED : மார் 14, 2026 01:45 AM

பெய்ஜிங்:இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட வகை ரப்பர் பொருட்கள்மீது சீனா பொருட்குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளது. சீன சந்தையில் அந்த பொருட்கள் மிக குறைந்த விலையில் குவிக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து சீன வர்த்தக அமைச்சகத்தின் அறிக்கை:
இந்தியா, ஜப்பான் மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்து 'ஹாலோஜனேட்டட் பியூட்டைல்' ரப்பர்கள், மலிவான விலையில் இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படுவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
எனவே, அந்த பொருட்கள் மீது 30.10 சதவீதம் வரை கூடுதல் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. மார்ச் 14 முதல் இந்த வரி விதிப்பு அமலுக்கு வரும். இது, அடுத்த 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சீனாவில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்து குவிக்கப்படும் பல பொருட்களுக்கு இந்தியா கூடுதல் வரி விதிப்பது வழக்கம். தற்போது இந்திய பொருட்களுக்கு சீனா கூடுதல் வரி விதித்துள்ளது.
