ஆன்லைனில் பி.எப்., செலுத்த சிட்டி யூனியன் வங்கியில் வசதி
ஆன்லைனில் பி.எப்., செலுத்த சிட்டி யூனியன் வங்கியில் வசதி
ADDED : நவ 07, 2025 01:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இ.பி.எப்.ஓ.,வுடன் இணைந்து, ஆன்லைன் வழியாக நிறுவனங்கள் பி.எப்., தொகையை செலுத்தும் வசதியை சிட்டி யூனியன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கி, இ.பி.எப்.ஓ.,வுடன் இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டது.
இந்த புதிய சேவை வாயிலாக சிட்டி யூனியன் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் தொழில் நிறுவனங்கள், தங்களின் பி.எப்., தொகையை எளிதாகவும் விரைவாகும் 'நெட்பேங்கிங்' வழியாகவும் செலுத்த முடியும்.
இதனால் நேர சிக்கனம் கிடைக்கும். இதற்கான ஒப்பந்தம், சி.யு.பி., வங்கியின் நிர்வாக இயக்குநர் விஜய் ஆனந்த், தமிழக இ.பி.எப்.ஓ., கமிஷனர் மணீஷ் அக்னிஹோத்ரி முன்னிலையில், சென்னையில் நேற்று கையெழுத்தானது.

