தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ நிலக்கரி எரிவாயுமயமாக்கல் 'கோல் இந்தியா' கவலை

 நிலக்கரி எரிவாயுமயமாக்கல் 'கோல் இந்தியா' கவலை

 நிலக்கரி எரிவாயுமயமாக்கல் 'கோல் இந்தியா' கவலை


ADDED : ஆக 30, 2026 02:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2026 02:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: மத்திய அரசின் 37,500 கோடி ரூபாய் மதிப்பிலான நிலக்கரி எரிவா யுமயமாக்கல் ஊக்கத்தொகை திட்டத்தின் விதிமுறைகள், தனியார் நிறுவனங்களுடன் போட்டியிடும்போது பொதுத்துறை நி றுவனமான கோல் இந்தியா நிறுவனத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என, அந்நிறுவனம் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

முதல் சுற்று விண்ணப்பங்களுக்கு 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என கோல் இந்தியா கோரியுள்ளது.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள 60 நாள் கால அவகாசம், ஏற்கனவே திட்ட அறிக்கைகளை தயாராக வைத்துள்ள தனியார் நிறுவனங் க ளுக்கே சாதக மாக அமையும் என தெரிவித்துள்ளது.இந்நிலையில், கோல் இந்தியாவின் கோரிக்கையை நிலக்கரி அமைச்சகம் நிராகரித்துள்ளதாக கூறப்படு கிறது.

முதல் சுற்று ஏலம் முடிந்தவுடன் அடுத்த சுற்று ஏலம் உடனடி யாக தொடங்கும் என்றும், ஒவ்வொரு சுற்றுக்கும் விண்ணப்பிக்க 2 மாதங்கள் மட்டுமே அவகாசம் வழங்க ப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us