வருவாய் 1 கோடி டாலரை கடந்த கோவை நிறுவன மென்பொருள்
வருவாய் 1 கோடி டாலரை கடந்த கோவை நிறுவன மென்பொருள்
ADDED : டிச 06, 2025 01:34 AM

கோவை: கோவையைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனமான 'கோவை டாட் கோ'வின், டாக்குமென்ட் 360 எனும் மென்பொருளின் ஆண்டு வருவாய் ஒரு கோடி அமெரிக்க டாலர்களை, அதாவது, 90 கோடி ரூபாயை கடந்துள்ளது.
கோவை டாட் கோ நிறுவனம், ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன், மென்பொருட்களை சேவை அடிப்படையில் வழங்கி வருகிறது. இந்நிறுவனத்தின், 2019ம் ஆண்டு தயாரிப்பான டாக்குமெண்ட் 360 மென்பொருள் ஆண்டு வருவாய், ஒரு கோடி அமெரிக்க டாலரை கடந்துள்ளது.
1,500க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்கள் இதை பயன்படுத்துகின்றன. இதன், 'பிஸ்டாக் 360' மென்பொருளும், ஆண்டு வருவாய் ஒரு கோடி அமெரிக்க டாலர்களை கடந்துள்ளது.
“வரும் 2028ல், இந்த வருவாய் 2.50 கோடி அமெரிக்க டாலர்களாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில், கோவை மேம்பாட்டு மையத்தில்220 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளோம்.
இது கோவைக்கு மட்டுமல்ல, தமிழகம் இந்திய மென்பொருள் துறை தொழிற்சூழலுக்கே சிறப்பான தருணம்,” என, கோவை டாட் கோ நிறுவனர் சரவணகுமார் தெரிவித்துள்ளார்.

