'நாஸ்டாக்' குழுவில் கோவை 'ஸ்டார்ட்அப்' நிறுவனருக்கு இடம்
'நாஸ்டாக்' குழுவில் கோவை 'ஸ்டார்ட்அப்' நிறுவனருக்கு இடம்
ADDED : ஜூன் 07, 2026 12:50 AM

கோவை: அமெரிக்காவின் பங்குச்சந்தை, 'நாஸ்டாக்' தொழில்முனைவோர் ஆலோசனைக் குழுவில், கோவையை சேர்ந்த 'ஸ்டார்ட்அப்' நிறுவனர் துருவ் சுயம்பிரகாசம் நியமிக்கப்பட்டுள்ளார்.
'ஐகிளீனிக்' எனும் அந்நிறுவனத்தின் சி.இ.ஓ., வான அவர் கூறியதாவது:
நோயாளிகள், மருத்துவர்களை ஆன்லைனில் கன்சல்ட் செய்ய வைப்பது, ஆரோக்கியம் குறித்த சந்தேகங்களை ஏ.ஐ., வாயிலாக விளக்குவது, எங்கள் முக்கிய பணி.
நாஸ்டாக் தொழில்முனைவோர் மையம் வாயிலாக, தேவையான கல்வி, தொழில்நுட்பம், சந்தை வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.
நான் 2019ம் ஆண்டு, 'நாஸ்டாக்' நடத்திய ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றேன். என் பணிகளை பார்த்து, அவர்களின் ஆலோசனை குழுவில் நியமித்துள்ளனர். இந்தியாவில் தொழில்முனைவோருக்கு பயனளிக்கும் வகையிலான திட்டங்களை கொண்டு வர உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
