தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ நிறுவன செய்திகள் 1

 நிறுவன செய்திகள் 1

 நிறுவன செய்திகள் 1


ADDED : ஏப் 16, 2026 01:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 01:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லக்னோ ஆலையில் டாடாவின் 10 லட்சமாவது வர்த்தக வாகனம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது லக்னோ ஆலையிலிருந்து 10 லட்சமாவது வர்த்தக வாகனத்தை நேற்று வெளியிட்டுள்ளது. இந்த மைல்கல் வாகனமாக ஒரு மின்சார பேருந்து அமைந்தது குறிப்பிடத்தக்கது. இது, உத்தரப் பிரதேசத்தில் நிறுவனத்தின் வலுவான உற்பத்தியையும், துாய்மையான எரிசக்தியை நோக்கிய நிறுவனத்தின் மாற்றத்தையும் காட்டுவதாக அந்நிறுவனம் தெரிவித்ததுள்ளது.

டாடா, சிங்கப்பூர் ஏர்லைன்ஸிடம் கூடுதல் நிதி கோரிய ஏர் இந்தியா கடந்த நிதியாண்டில் கிட்டத்தட்ட 22,418 கோடி ரூபாய் இழப்பை சந்தித்த ஏர் இந்தியா, தற்போது, தனது பங்குதாரர்களான டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸிடம் கூடுதல் நிதியைக் கோரியுள்ளது. நிறுவனத்தை மீட்டெடுக்க தேவையான நிதி அளவு குறித்து தொடர்ந்து ஆலோசனைகள் நடந்து வருகின்றன. நஷ்டத்திலிருந்து மீண்டு வர இந்த நிதி உதவி, அந்நிறுவனத்துக்கு அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

ஜெனரேட்டர்களை முன்கூட்டியே அனுப்பி வைத்த 'எல் அண்டு டி' எல் அண்டு டி நிறுவனம், இந்திய அணுமின் கழகத்திற்கு வழங்க வேண்டிய மேலும் ஒரு நீராவி ஜெனரேட்டரை, குறித்த காலத்திற்கு முன்பே வெற்றிகரமாக அனுப்பி வைத்துள்ளது. நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு இலக்கை விரைவுபடுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

'ரேடியல் ஐ.டி., பார்க்'கில் 'மைண்ட்ஸ்பேஸ் ரீட்' முதலீடு 'மைண்ட்ஸ்பேஸ் பார்க்ஸ் ரீட்' நிறுவனம், சென்னையில் அலுவலக வளாகத்தை கொண்டிருக்கும், 'ரேடியல் ஐ.டி., பார்க்' நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை 1,500 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தி உள்ளது. 26 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த வளாகத்தின் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us