தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்


ADDED : மே 06, 2026 06:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2026 06:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒடிஷா ஆர்டர் பெற்ற எல் அண்டு டி.,



ஒ டிஷா வில் நிலக்கரியிலிருந்து அமோனியம் நைட்ரேட் தயாரிக்கும் திட்டத்தை அமைக்க கிட்டத்தட்ட 2,500 - 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை எல் அண்டு டி., நிறுவனம் பெற்றுள்ளது. கோல் இந்தியா மற்றும் பெல் நிறுவனங்களுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பி.ஏ.எஸ்.எப்., புதிய மையங்கள்



ச ர்வதேச ரசாயன நிறுவனமான பி.ஏ.எஸ்.எப்., ஹைதராபாதில் இரண்டு புதிய உலகளாவிய மையங்களை அமைக்க உள்ளது. இவை நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாடுகளுக்கு தேவையான ஒருங்கிணைந்த மையங்களாக செயல்படும். இதன் வாயிலாக தென்னிந்தியாவில் தொழில்நுட்பம் மற்றும் சேவை துறையில் பல புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கிப்ட் சிட்டியில் நிதி அலுவலகங்கள்



கு ஜராத்தின் கிப்ட் சிட்டியில் அதானி குழுமம், பார்தி ஏர்டெல், ஜென்பாக்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது நிதி மேலாண்மை அலுவலகங்களை துவக்கி உள்ளன. வரிச்சலுகைகள் மற்றும் சர்வதேச தரத்திலான கட்டமைப்பு வசதிகள் காரணமாக இந்நிறுவனங்கள் கிப்ட் சிட்டியைத் தேர்வு செய்துள்ளன.

ரிலையன்ஸ் ஒத்துழைப்பு



ட் ரோன் இறக்குமதி தொடர்பான லஞ்ச வழக்கில், போலீசார் கேட்ட ஆவணங்களை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சமர்ப்பித்துள்ளது. மேலும், இவ்வழக்கில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக நிறுவனம் உறுதி அளித்து உள்ளது. இதற்கிடையே, இவ்வழக்கில் கைதான நிறுவனத்தின் முதுநிலை துணை தலைவர் பரத் மாத்துாருக்கு நீதிமன்றம் தற்போது ஜாமின் வழங்கியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us