தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்


UPDATED : மே 07, 2026 11:44 PM

ADDED : மே 07, 2026 11:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 07, 2026 11:44 PM ADDED : மே 07, 2026 11:39 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஆப்பிள்' ரூ.100 கோடி முதலீடு

அ மெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, அந்நிறுவனம் முதற்கட்டமாக 100 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்ற கிளீன்மேக்ஸ் நிறுவனத்துடன் ஆப்பிள் ஒப்பந்தம் செய்துள்ளது.



'கோட்டக்' வங்கி பங்கு வாங்க அனுமதி

ஏ .யு., ஸ்மால் பைனான்ஸ் வங்கி, பெடரல் வங்கி ஆகிய இரண்டிலும், தனது பங்குகளை தலா 9.99 சதவீதம் வரை உயர்த்த கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு ஆர்.பி.ஐ., அனுமதி அளித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பங்கு சந்தையில் வரவேற்பு காணப்பட்டது. மூன்று வங்கிகளின் பங்கு களும் நேற்று 0.99 - 1.47 சதவீதம் உயர்ந்தன.



'இமாமி' வசமானது 'இன்க்நட் டிஜிட்டல்'

'வே டிக்ஸ்' மற்றும் 'ஸ்கின்கிராப்ட்' பிராண்டுகளின் உரிமையாளரான இன்க்நட் டிஜிட்டல் நிறுவனத்தை, இமாமி நிறுவனம் 321 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தி உள்ளது. இதன் வாயிலாக, ஒவ்வொருவருக்கும் ஏற்ற தனித்துவ அழகு சாதன பொருட்களை வழங்குவதற்கான சந்தையில் இமாமி தனது நிலையை வலுப்படுத்தி உள்ளது.

ஏர் ஏசியா 150 விமானங்கள் ஆர்டர்

ஏ ர் ஏசியா நிறுவனம், ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து ஏ220 - 300 ரகத்தை சேர்ந்த 150 விமானங்களை 1.79 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளது. இது, ஏ220 வகை விமானங்களுக்கு உலகளவில் வழங்கப்பட்ட மிகப்பெரிய ஒற்றை ஆர்டர் ஆகும். தனது போக்குவரத்து சேவையை விரிவாக்க இந்நிறுவனம் இந்த ஆர்டரை செய்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us