ADDED : மே 09, 2026 03:27 AM

விலையை உயர்த்தும் பிரிட்டானியா
மே ற்காசிய போர் பதற்றம் காரணமாக மூலப்பொருள் செலவு அதிகரித்துள்ளதால், பிரிட்டானியா நிறுவனம் தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. அடுத்த ஐந்து மாதங்களுக்கு தேவையான பாமாயில் கையிருப்பு தங்களிடம் இருந்தாலும், மற்ற பொருள்களுக்கு விலை அழுத்தம் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
முதலீட்டு வாய்ப்புகளை ஆராயும் கூகுள்
இ ந்தியாவில் ஏ.ஐ., உட்கட்டமைப்பு, சர்வர் மற்றும் ட்ரோன் உற்பத்தி துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளை கூகுள் நிறுவனம் ஆராய்ந்து வருவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை நோக்கமாக கொண்டு இது தொடர்பான பேச்சு நடந்து வருவதாக அவர் கூறினார்.
'அடோபி' புதிய அலுவலகம்
ச ர்வதேச தொழில்நுட்ப நிறு வனமான அடோபி, நம் நாட்டில் தனது ஏழாவது அலுவலகத்தை நொய்டா பகுதியில் நேற்று தொடங்கியுள்ளது. இதன் வாயிலாக, இந்தியாவில் தனது தொழில் செயல்பாடுகளை அந்த நிறுவனம் மேலும் விரிவாக்கம் செய்துள்ளது. அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு வழங்க இது உதவும்.
