தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்

 நிறுவன செய்திகள்


UPDATED : மே 10, 2026 01:21 AM

ADDED : மே 10, 2026 12:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 10, 2026 01:21 AM ADDED : மே 10, 2026 12:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குஜராத்துக்கு மாறும் பிரிட்டானியா வணிகம்

பி ரிட்டானியா நிறுவனம், மேற்காசிய போர் சூழல் காரணமாக வட அமெரிக்க ஏற்றுமதி வர்த்தகத்தை, ஓமனிலிருந்து குஜராத்தின் முந்த்ராவுக்கு மாற்றியுள்ளது. எரிபொருள், பேக்கேஜிங் செலவுகள் 20 சதவீதம் உயர்ந்ததால் பிஸ்கட் விலையை உயர்த்தவும், சில பொருட்களின் எடையை குறைக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தன் இணைய வழி விற்பனையில் 70 சதவீதம், 'குவிக் காமர்ஸ்' விற்பனை வாயிலாக கிடைப்பதாக பிரிட்டானியா கூறியுள்ளது.



ஆர்.பி.ஐ., அதிகாரிகள் எதிர்ப்பு

ரி சர்வ் வங்கியின் புதிய பதவி உயர்வு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலியிடங்கள் இருந்தால் மட்டுமே பதவி உயர்வு என்ற புதிய விதியால், 8,000 அதிகாரிகள் ஒரே பதவியில் நீண்ட காலம் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, முன்பை போலவே, குறிப்பிட்ட காலம் பணி மூப்பு இருந்தாலே, (காலியிடம் இருந்தாலும் இல்லாவிட்டாலும்) பதவி உயர்வு தர வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் சங்கம், ரிசர்வ் வங்கி கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ளது.

ஏர் இந்தியா ஆட்குறைப்பு இல்லை

உ லகளவில் விமான துறையில் ஏற்பட்டுள்ள நிதி மற்றும் செயல்பாட்டு சவால்கள் காரணமாக, இந்த ஆண்டுக்கான ஊதிய உயர்வு ஒத்தி வைக்கப்படுவதாக ஏர் இந்தியா சி.இ.ஓ., கேம்பெல் வில்சன் தெரிவித்துள்ளார். இருப்பினும், பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்றும் அவர் உறுதியளித்தார். எரிபொருள் விலை உயர்வு, புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் விமான பயண நேர நீட்டிப்பு காரணமாக செயல்பாட்டு செலவுகள் உயர்ந்துள்ளதாகவும், 2025- - 26ல் நிறுவனம் எதிர்பார்த்ததைவிட அதிக இழப்பை சந்தித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us